நெருங்கும் தீபாவளி.. அதிகரிக்கும் காற்று மாசு.. பண்டிகை சீசனில் பாதுகாப்பாக இருக்க பயனுள்ள டிப்ஸ்


நெருங்கும் தீபாவளி.. அதிகரிக்கும் காற்று மாசு.. பண்டிகை சீசனில் பாதுகாப்பாக இருக்க பயனுள்ள டிப்ஸ்
x

மாசுபட்ட காற்று வீட்டிற்குள் பரவுவதை தடுக்க, கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் காற்று மாசுபாடு அதிகமாகும். கொண்டாட்டங்களின்போது அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதே இதற்கு முக்கிய காரணம். பட்டாசுகளால் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் துகள்கள் உள்ளிட்ட பல்வேறு தீங்கு விளைவிக்கும் மாசுகள் காற்றில் கலக்கின்றன.

இந்த ஆண்டு ஏற்கனவே பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து மக்களை திணறடித்து வருகிறது. இன்னும் 3 நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால், அன்றைய தினம் பட்டாசுகளால் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்கும். இந்த மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

எனவே, தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது காற்று மாசுபாடு நம்மை பாதிக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றலாம். அவற்றை பார்ப்போம்...

வெளியில் அதிக நேரம் இருப்பதை குறைக்க முயற்சிக்கவும். குறிப்பாக மாசுபாடு அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் அலர்ஜி இருப்பவர்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

மாசுபட்ட காற்று வீட்டிற்குள் பரவுவதை தடுக்க, கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். காற்று சுத்திகரிப்பான்கள் இருந்தால் பயன்படுத்தவும்.

கட்டாயம் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், முக கவசம் அணிந்து செல்லுங்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் மாசு அளவு அதிகமாக இருக்கும்போது N95 அல்லது N99 முக கவசங்கள் அணிவது நல்லது.

பண்டிகை காலங்களில் பட்டாசுகளால் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்கும் என்பதால், பட்டாசுகளின் பயன்பாட்டை குறைக்கவேண்டும். பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த அல்லது அதிக சத்தமில்லாத பட்டாசுகளை வெடிக்கலாம்.


Next Story