பிரேமலு படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு


பிரேமலு படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
x

பிரேமலு படத்தின் 2-ம் பாகம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் 'பிரேமலு'. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

திரையரங்கில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கடந்த 12-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியானது. இந்த நிலையில், பிரேமலு படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும், 2025-ம் ஆண்டு 'பிரேமலு-2' ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.




Next Story