கர்நாடகாவில் சமூக விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது: பிரதமர் மோடி


கர்நாடகாவில் சமூக விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது:  பிரதமர் மோடி
x

கர்நாடகாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து விட்டது என பிரதமர் மோடி பொது கூட்டமொன்றில் பேசும்போது கூறியுள்ளார்.

கலபுரகி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனையொட்டி கர்நாடகாவில் கலபுரகி நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என திரளாக பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசும்போது, கலபுரகியில் திரண்டிருக்கும் மக்கள் மற்றும் உங்கள் அனைவரின் முகத்தில் காணப்படும் ஆர்வம் இதிலிருந்தே, மக்களவை தேர்தலில், சாதனை பதிவாக அதிக இடங்களில் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்ய கர்நாடக மக்களாகிய நீங்கள் முடிவெடுத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.

தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நீங்கள் அதற்கு முன்பே அறிவித்து விட்டீர்கள். கர்நாடகா முழுவதும் இன்று கூறுவது என்னவென்றால், இந்த முறை நாங்கள் 400 தொகுதிகளுக்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றுவோம் என்பதே ஆகும் என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, காங்கிரசுக்கு எதிராக நீங்கள் அனைவரும் கொண்டுள்ள கோபம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எத்தனை முறை உடைகளை மாற்றினாலும், அவர்களுடைய செயல்கள் மாறாது என்ற வகையை சேர்ந்த கட்சியது. கர்நாடக மக்கள் விழித்து கொண்டனர். காங்கிரஸ் பற்றிய உண்மையை மக்கள் தெரிந்து கொண்டனர் என கூறியுள்ளார்.

கர்நாடகாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து விட்டது. சமூக விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.


Next Story