ரூ.1.87 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு வக்கீல் சிக்கினார்


ரூ.1.87 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு வக்கீல் சிக்கினார்
x

போக்சோ வழக்கில் கைதானவரை விடுவிக்க உதவுவதாக கூறி ரூ.1.87 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு வக்கீலை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

தாவணகெரே

ரூ.1.87 லட்சம் லஞ்சம்

தாணகெரே மாவட்டம் கிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மதன் குமார். இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மதன் குமாரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை லோக் அயுக்தா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மதன் குமாருக்கு ஆதரவாக அரசு வக்கீல் ரேக்கா என்பவர் வாதிட்டார். இவர் போக்சோ வழக்கில் சிக்கிய மதன் குமாரை எளிதில் வெளியே கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தார். இதற்காக ரூ.3 லட்சம் வரை பேரம் பேசியுள்ளார். இந்த தொகையில் ரூ.1.13 லட்சத்தை முதல் தவணையாக மதன் குமார் வழங்கிவிட்டார். மீதமுள்ள ரூ.1.87 லட்சத்தை விரைவில் தருவதாக கூறியிருந்தார்.

லோக் அயுக்தா கைது

இதையடுத்து அந்த பணத்தை தரும்படி வக்கீல் ரேக்கா, மதன் குமாருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த மதன் குமார் லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை வாங்கிய லோக் அயுக்தா போலீசார், மதன் குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1.87 லட்சம் நோட்டுகளை கொடுத்தனுப்பினர். மதன் குமார், ரேக்காவை அவரது வீட்டில் சந்தித்து ரூ.1.87 லட்சத்தை வழங்கினார்.

அப்போது அங்கு வந்த லோக் அயுக்தா போலீசார் ரேக்காவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1.87 லட்சம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.


Next Story