தெரு நாய் விவகாரத்தில் சர்ச்சை கருத்து- பச்சு கடு எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டார்


தெரு நாய் விவகாரத்தில் சர்ச்சை கருத்து- பச்சு கடு எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

தெரு நாய் விவகாரத்தில் சர்ச்சை கருத்து பச்சு கடு எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டார்.

மும்பை,

சமீபத்தில் சட்டசபையில் பேசிய பிரகர் ஜனசக்தி கட்சி எம்.எல்.ஏ. பச்சு கடு, மராட்டியத்தில் உள்ள தெருநாய்களை அசாம் மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும் என பேசினார். அவர் அசாமில் நாய் இறைச்சிக்கு கிராக்கி இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சை கண்டித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதினார்.

இந்தநிலையில் தெருநாய் தொடர்பாக சட்டசபையில் பேசிய பேச்சுக்கு பச்சு கடு மன்னிப்பு கேட்டார். இதுதொடர்பாக அவர், "எனது பேச்சு யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். எனது கருத்தை திரும்ப பெற்று கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

பச்சு கடு கடந்த மகாவிகாஸ் அகாடி ஆட்சியில் மந்திரியாக இருந்தவர். உத்தவ் தாக்கரேக்கு எதிராக ஆட்சியை கவிழ்த்த போது ஏக்நாத் ஷிண்டேக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story