விபத்தில் டி.வி. நடிகை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


விபத்தில் டி.வி. நடிகை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)

தானே,

மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை ஊர்வசி தோலாகியா (வயது44). இவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் மிராரோடு பகுதியில் ஸ்டூடியோவுக்கு காரில் சென்றார். கார் தானே மாவட்டம், காஷ்மிரா பகுதியில் சென்ற போது அந்த வழியாக மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி பஸ் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நடிகையின் கார் லேசாக சேதமடைந்தது. அவர் காயமின்றி உயிர் தப்பினாா்.

விபத்து குறித்து நடிகை தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. எனினும் போலீசார் விபத்து தொடர்பாக பள்ளி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஊா்வசி தோலாகியா இந்தி பிக்பாஸ்-6 நிகழ்ச்சி வெற்றியாளர் ஆவார். மேலும் பல டி.வி. தொடர்களில் நடித்து உள்ளார்.


Next Story