திருவண்ணாமலைக்கு 150 கூடுதல் சிறப்பு பஸ்கள்


திருவண்ணாமலைக்கு 150 கூடுதல் சிறப்பு பஸ்கள்
x

திருவண்ணாமலைக்கு 150 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட் கும்பகோணம் சார்பில் பவுர்ணமியையொட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், மணப்பாறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேசுவரம், கரூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும், திருவண்ணாமலை - சென்னை தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்ப) லிட் கும்பகோணம் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story