திருவண்ணாமலை கிரிவலம் செல்ல 150 சிறப்பு பஸ்கள்


திருவண்ணாமலை கிரிவலம் செல்ல 150 சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:48 PM GMT)

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்


திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், மணப்பாறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கரூர் ஆகிய இடங்களிலிருந்து, திருவண்ணாமலைக்கு 150 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

விரிவான ஏற்பாடுகள்

அதேபோல திருவண்ணாமலை-சென்னை வழித்தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story