தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை


தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2023 7:15 PM GMT (Updated: 26 Oct 2023 7:15 PM GMT)

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஊராட்சி கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செயற்பொறியாளர் சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிவாரணம்

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்த மேற்கூரை அமைக்க வேண்டும். தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கான நிவாரணம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க்காப்பீடு நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த பகுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பேசினர்.

இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவர் பேசுகையில், 'பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றித்தரப்படும்' என்றார்.

கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை நிறைவேற்றி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கிய தமிழக முதல்-அசைமச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story