4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்


4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் மழை மற்றும் காற்றின் வேகம், புயல் எச்சரிக்கை காரணமாக ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை புஷ்பவனம் வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

இதனால் மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடல் சீற்றம் தணிந்தது

இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியதாலும், கடல் சீற்றம் தணிந்ததாலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனால் நான்கு நாட்களுக்கு பிறகு உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சென்றுள்ளனர். முன்னதாக மீனவர்கள் தங்களுக்கு தேவையான மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றி வைத்தனர்.


Next Story