தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story