புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரம்


புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

அருப்புக்கோட்டை நகராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

குடிநீர் தட்டுப்பாடு

அருப்புக்கோட்டை நகராட்சியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு சில இடங்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் மங்கலாகவும், கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் முதல் சுத்தமான தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அந்த புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாக ெரயில் நிலையம் அருகே புதிதாக 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மும்முரமாக கட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி கூறியதாவது:-

13 லட்சம் லிட்டர் கொள்ளளவு

நகராட்சியில் உள்ள 36 வார்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்கனவே இங்கு 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. தற்போது புதிதாக 13 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கட்டப்பட்டு வரும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் அதிக அளவு குடிநீரை சேகரித்து மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

இந்த புதிய நீர்த்தேக்க தொட்டியில் வைகை குடிநீர் மற்றும் தாமிரபரணி குடிநீர் இரண்டையும் தனித்தனியாக சேகரிக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைந்து புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் குடிநீர் இந்த தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story