மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x

மின்ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், டாஸ்மாக் உள்ளிட்ட மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு 2023-ம் ஆண்டு போனஸ் பேச்சுவார்த்தையை, தொழிற்சங்கங்களோடு நடத்தி போனஸ் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விலைவாசி உயர்வுபடி அகவிலைப்படி உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர்- கோவை சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு கரூர் மின்திட்ட கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன், துணை தலைவர் சுப்பிரமணியன், மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story