புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் அற்புதமான செயல்திறனுடன் சந்தையை வசப்படுத்த களமிறங்கும் ஆல் - நியூ ஹுண்டாய் வெர்னா


வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா வடிவமைக்கப்பட்டிருக்கிறது

  • ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா, 6 ஏர்பேக்குகள் உட்பட, (ஓட்டுனர், பயணியர், பக்கவாட்டு மற்றும் திரைச்சீலை) 30 ஸ்டான்டர்டு பாதுகாப்பு அம்சங்களுடனும் மற்றும் விஎஸ்எம் உடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC), அனைத்து வீல்களுக்குமான டிஸ்க் பிரேக்குகள், EPB, ECM, TPMS (ஹைலைன்) போன்ற 65+ மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடனும் வெளிவருகிறது.
  • இப்பிரிவில் 26 முதல் மற்றும் மிகச்சிறந்த அம்சங்களை அறிமுகம் செய்வதன் மூலம் ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா அதன் பிரிவில் தரஅளவுகோலை மறுநிர்ணயம் செய்யும்.
  • மொத்தத்தில் 17 நிலை 2 – ADAS அம்சங்களை கொண்டிருக்கும் ஆல் நியூ ஹுண்டாய் வெர்னா, ஹுண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் வழியாக இப்பிரிவில் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.
  • கவர்ச்சிகரமான ஸ்போர்ட்டினெஸ் என்ற உலகளாவிய வடிவமைப்பு அடையாளத்தைச் சார்ந்த ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • இப்பிரிவில் 2670 மி.மீ. நீளம் மற்றும் 1765 மி.மீ. அகலம் கொண்ட மிக நீண்ட வீல்பேஸ் ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னாவில் அமைந்திருக்கிறது.
  • இப்பரிவில் மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் பெருமையை ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா பெற்றிருக்கிறது. 117.5 kW (160 PS) / 5,500 r/min ஆற்றல் மற்றும் 253Nm (25.8 kgm)/ 1,500~3,500 r/min டார்க் - ஐ உருவாக்கும் 1.5ஃடர்போ புனுi பெட்ரோல் இன்ஜின் இப்போது ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னாவில் பொருத்தப்பட்டிருக்கிறது.
  • வாடிக்கையாளர்களின் இணைக்கப்பட்ட (கனெக்டட்) கார் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் H2C (ஹோம் டு கார்) அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் உட்பட 65-க்கும் அதிகமான இணைக்கப்பட்ட கார் அம்சங்கள் ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னாவில் இடம்பெற்றிருக்கின்றன.
  • உட்பொதிந்த குரல் கட்டளைகள் மற்றும் 'AC on Kar do' போன்ற இந்தியும், ஆங்கிலமும் கலந்த கட்டளைகளை வழங்கும் புதிய அம்சம் உட்பட, பல புதுமையான அம்சங்கள் கொண்டதாக ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா தயாரிக்கப்பட்டிருக்கிறது.

குருகிராம்: மார்ச் 21, 2023: இந்தியாவின் முதல் Smart mobility solution provider வழங்குனர் மற்றும் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளர் என்ற பெருமையுடன் திகழும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா அறிமுகத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் மனதை மயக்கி தன்வசப்படுத்த தயார்நிலையில் இருக்கிறது.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா, புதிய தொழில்நுட்பங்கள், கூடுதல் சௌகரியம், தாராள இடவசதி மற்றும் அதிகரித்த செயல்திறன் ஆகியவற்றின் மூலம் இப்பிரிவில் தர அளவுகோல்களை மறுவரையறை செய்திருக்கிறது.

ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் - ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. அன்சூ கிம், ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா அறிமுக நிகழ்வில் பேசுகையில் கூறியதாவது: "ஆல்-நியூ ஹுண்டாய் வெர்னா அறிமுகத்தின் மூலம் இன்றைய தினம் ஒரு புதிய பயணத்தை நாங்கள் அதிக உற்சாகத்தோடு தொடங்குகிறோம். இந்த புதிய செடான் காருக்கான எமது தொலைநோக்குத் திட்டமும், குறிக்கோள்களும் மேம்பட்ட தொழில்நுட்பம், அழகான வடிவமைப்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் ஆகிய மூன்றின் நேர்;த்தியான கலவையாக ஒருங்கிணைந்திருக்கின்றன. எதிர்காலத்திற்குரிய மற்றும் ஆற்றலும், துடிப்பும் மிக்க மொபிலிட்டி அனுபவங்களை உருவாக்கும் திறன் கொண்டதாக இந்த செடான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் எமது மிகப்புகழ் பெற்ற மாடல்களுள் ஒன்றாக வெர்னா இருந்து வருகிறது. இந்த 6வது தலைமுறை மாடல் அறிமுகத்தின் மூலம் வளர்ச்சியின் வரம்பற்ற சாத்தியங்களைப் பிரதிபலிக்கின்ற ஒரு செடான் காரை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்களின் பேரார்வங்களை மிகச்சிறப்பாக பூர்த்தி செய்வதுடன், தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் மிக உயர்ந்த மொபிலிட்டி அனுபவங்களை சாத்தியமாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


Next Story