இலவச சிறப்பு மருத்துவமுகாம்


இலவச சிறப்பு மருத்துவமுகாம்
x
திருப்பூர்

குடிமங்கலம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குடிமங்கலம் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணம் ஆகியவை வழங்கப்பட்டது. இலவச சிறப்பு மருத்துவ முகாமில் மொத்தம் 86 பேர் கலந்து கொண்டனர்.

உதவி உபகரணங்கள் ஒருவருக்கும், புதிய தேசிய அடையாள அட்டை 30 பேருக்கும் இலவச பஸ் பாஸ் ரயில் பாஸ் 48 பேருக்கும் வழங்கப்பட்டது.

மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி வட்டார கல்வி அலுவலர் சரவணகுமார்.மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த ராம்குமார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுமதி வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, ஆசிரிய பயிற்றுநர்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story