மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி


மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
x

மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினந்தோறும் ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். மேலும் மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலை வழியாக ஏராளமான வாகனங்களும் தென் மாவட்டங்கள் நோக்கி செல்கின்றன. இந்த நிலையில் மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலை நடுவில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை மற்றும் தொழிற்சாலைக்கு செல்லும் சாலை போன்ற பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் மறைமலைநகரில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மின்விளக்குகள் எரிவது கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் செல்லும்போது மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

சாலையில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் வாகனங்களில் செல்லும் பொது மக்களிடம் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கு, ஜி.எஸ்.டி. சாலையின் நடுவில் உள்ள மின்விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story