வாக்குச்சாவடியில் எத்தனை பேர் நிற்கிறார்கள்: வீட்டில் இருந்தே அறிந்து கொள்ளலாம்: எப்படி தெரியுமா?


வாக்குச்சாவடியில் எத்தனை பேர் நிற்கிறார்கள்: வீட்டில் இருந்தே அறிந்து கொள்ளலாம்: எப்படி தெரியுமா?
x

கோப்பு படம் (பிடிஐ)

வாக்குச்சாவடியில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நடவடிக்கை ஒன்றை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பொதுமக்கள், நமது வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்குமா? எப்போது செல்லலாம்? இப்போது சென்றால் உடனே வாக்களித்து விடலாமா? என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது உங்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க எத்தனை பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்பதனை நாம் வீட்டில் இருந்தப்படியே தெரிந்து கொள்ளலாம். இங்கே உள்ள கியூஆர் கோடு-ஐ ஸகேன் செய்தோ, https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்தில் சென்றோ உங்களது வாக்குச்சாவடிகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் அங்கு எத்தனை பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவலை தெரிந்து கொள்ளலாம். வாக்குச்சாவடியில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை பலன் அளிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.


Next Story