முத்தாலம்மன் கோவில் சாத்திரை திருவிழா


முத்தாலம்மன் கோவில் சாத்திரை திருவிழா
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

முத்தாலம்மன் கோவில் சாத்திரை திருவிழா நடைபெற்றது

சிவகங்கை

எஸ்.புதூர் அருகே உள்ள திருமலைக்குடி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் முத்தாலம்மன் கோவில் சாத்திரை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் கோவில் மந்தை முன்பாக கும்மி அடித்து வழிபாடு நடத்தினர். திருவிழா அன்று வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் பச்சை மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சாமி சிலையை முசுண்டப்பட்டி கிராமத்தில் இருந்து சாமியாடி தலையில் சுமந்து திருமலைக்குடி மந்தை கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு ஏற்றியும், குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் கரும்பு தொட்டில்கள் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவின் கடைசி நாள் அன்று பச்சை மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை திருமலைக்குடி மந்தையில் இருந்து சாமியாடி தலையில் சுமந்து பூஞ்சோலை செல்லுதல் எனப்படும் சாமி அழித்தல் (உடைத்தல்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ப-லர் கலந்து கொண்டனர்.


Next Story