கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:47 PM GMT)

கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத குருவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது

சிவகங்கை

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத குருவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 13 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கமலாம்பிகா சமேத கைலாசநாதர், உலகநாயகி சமேத உலகநாத சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story