இருள் சூழ்ந்து கிடக்கும் ரெயில்வே மேம்பாலம்- கீழ் பாலம்


இருள் சூழ்ந்து கிடக்கும் ரெயில்வே மேம்பாலம்- கீழ் பாலம்
x

பூதலூரில் இருள் சூழ்ந்து கிடக்கும் ரெயில்வே மேம்பாலம்- கீழ் பாலத்தில் மின் விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

பூதலூரில் விரைவான போக்குவரத்து வசதிக்காக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பூண்டி மாதாக்கோவில், லால்குடி உள்ளிட்ட பல ஊர்களுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஏராளமான லாரிகள், 2 சக்கர வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. இதையடுத்து மேம்பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் பூதலூரில் ரெயில்வே கீழ் பாலம் உள்ளது. இதன் வழியாக நாச்சியார்பட்டி, ஜெகன்மோகன் நகர், ரெயில் நிலைய பிரதான பகுதிக்கு சென்று வரலாம். கடந்த சில நாட்களாக இந்த கீழ் பாலத்தில் மேற்கூரை பொருத்தப்பட்டது. மேற்கூரை பொருத்தப்பட்டதால் பகலில் இருளாக கீழ்பாலம் காணப்படுகிறது. மேலும் கீழ் பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இதனால் பகலிலும் இருள் சூழ்ந்து பூதலூர் கீழ் பாலம் காணப்படுகிறது. இந்த இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே பூதலூர் ரெயில்வே மேம்பாலம் மற்றும் கீழ்பாலத்தில் மின் விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


Next Story