ராஜராஜசோழன் சதய விழா


ராஜராஜசோழன் சதய விழா
x

அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் ராஜராஜசோழன் சதய விழா

திருப்பூர்

சேவூர்,

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையான சிவஸ்தலமான பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட சோழனான ராஜராஜன் மாமன்னனின் 1038-வது சதயப்பெருவிழா நடைபெற்றது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனை போற்றும் விதமாக சம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது. ஓதிய பலனை தரக்கூடிய 25 திருப்பதிகங்கள் கொண்ட தேவாரத்திரட்டு பண்ணொன்ற விண்ணப்பித்தல், திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் ஓதுவார் மூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு ஓதப்பட்டது. முன்னதாக விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான சிவனடியார்கள் பங்கேற்று முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன், அறங்காவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.



Next Story