சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல்


சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல்
x

நாமக்கல்லில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்

சாலைமறியல் போராட்டம்

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சிறப்பு பென்சன் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களை சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை கொண்டு நிரப்பி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்கிற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

74 பேர் கைது

நாமக்கல் பூங்கா சாலையில் கூடிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹரிபாபு வரவேற்றார். இதில் சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் நடேசன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதில் 20 பெண்கள் உள்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story