சத்துணவு -அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மறியல்


சத்துணவு -அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மறியல்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

ஓய்வூதியம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அகவிலைபடியுடன் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில செயலாளர் தனபாக்கியம் கண்டன உரையாற்றினார்.

கைது

இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். இதில் 60 பெண்கள் உள்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story