ரூ.60 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


ரூ.60 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 27 Oct 2023 1:15 AM GMT (Updated: 27 Oct 2023 1:15 AM GMT)

அய்யலூர் சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சந்தை கூடியது. கடந்த புரட்டாசி மாதத்தில் ஆடு, கோழி விற்பனை சந்தையில் மந்தமாக இருந்தது. ஆனால் புரட்டாசி முடிந்து ஐப்பசி பிறந்ததையொட்டி நேற்று சந்தையில் விற்பனை களை கட்டியது.

திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வந்து ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக வாங்கி சென்றனர். 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.7 ஆயிரத்து 500 வரையிலும், நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அய்யலூர் சந்தையில் விற்பனை விறு, விறுப்பாக நடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், இனி வரும் வாரங்களில் ஆடு மற்றும் கோழிகளின் விலை அதிகரிக்கும். நேற்று ஒரே நாளில் ரூ.60 லட்சம் வரை ஆடு, கோழி விற்பனை நடந்தது என்றனர்.


Next Story