கோவில்பட்டியில் தைப்பூச திருவிழா:பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.


தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கதிர்வேல் முருகன் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தைப்பூச திருவிழா நேற்று நடந்தது.

இத்திருவிழாவை முன்னிட்டு 3,333 பக்தர்கள் செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ரகத்தில் கதிர்வேல் முருகன், மேளதாளம் முழங்க ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடத்துடன் பின் தொடர்ந்து சென்றனர். இந்த பால்குட ஊர்வலம் எட்டயபுரம் ரோடு, கதிரேசன் கோவில் ரோடு வழியாக வீர வாஞ்சி நகர் கதிர்வேல் முருகன் கோவிலை சென்றடைந்தது. அங்கு கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், ஆதீபாராதனைகள் நடந்தது. இதில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமையில் மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் நிர்வாகிகள் பக்தர்களுக்கு சேலை, வேட்டி, பிரசாதம் வழங்கினர்.

வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா சிறப்பு வழிபாடுகளுடன் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story