சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள்; ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி


சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள்; ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி
x

Image Courtesy: AFP 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாத்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தப்பட்டியலில் சச்சின் டெண்டுகல்கர் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலிக்கு அடுத்த படியாக 3வது இடத்தில் ராகுல் டிராவிட், 4வது இடத்தில் கங்குலி, 5வது இடத்தில் எம்.எஸ்.தோனி ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:-

சச்சின் டெண்டுல்கர் - 664 போட்டிகள் - 34,357 ரன்கள்

விராட் கோலி - 471 போட்டிகள் - 24,078 ரன்கள்

ராகுல் திராவிட் - 404 போட்டிகள் - 24,064 ரன்கள்

கங்குலி - 421 போட்டிகள் - 18,433 ரன்கள்

எம்.எஸ்.தோனி - 535 போட்டிகள் - 17,092 ரன்கள்


Next Story