பலாப்பழ கபாப்


பலாப்பழ கபாப்
x
தினத்தந்தி 27 Aug 2023 1:30 AM GMT (Updated: 27 Aug 2023 1:30 AM GMT)

சுவையான பலாப்பழ கபாப், பலாப்பழ ஜாம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

லாப்பழ கபாப்

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை - 1 கப்

பலாச்சுளை - ½ கப்

பூண்டு - 4 பல் (பொடிதாக நறுக்கியது)

இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

பச்சை மிளகாய் - 2 (பொடிதாக நறுக்கியது)

கரம் மசாலாத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்

சீரகத்தூள் - ½ டீஸ்பூன்

கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்

உலர் பழங்கள் - 2 டேபிள் ஸ்பூன்

சோளமாவு - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - ¼ கப்

சட்னி தயாரிக்க:

பலாக்கொட்டை - ½ கப் (வேகவைத்தது)

பச்சைமிளகாய் - 1

உப்பு - தேவைக்கு

எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை:

சட்னி:

பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சோளமாவு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு அதனுடன் பலாச்சுளைகளை சேர்த்து லேசாக பிசைந்து, சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பலாக்கொட்டைகளை வேகவைத்து அதன் மேல்தோலை நீக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும். இந்தக் கலவையை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், பலாக்கொட்டை, கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இந்த விழுதுடன் பொடிதாக நறுக்கிய உலர் பழங்களை சேர்த்து நன்றாகப் பிசையவும். இந்தக் கலவையை விரும்பிய வடிவில் தயார் செய்து, தவாவில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறலாம்.

பலாப்பழ ஜாம்

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை - 20 (விதை நீக்கியது)

வெல்லம் - 1 கப்

நெய் - ½ கப்

செய்முறை:

கொதிக்கும் தண்ணீரில் பலாச்சுளைகளை போட்டு குழைவாக வேகவைக்கவும். அது ஆறிய பின்பு தண்ணீரை வடிகட்டி, சுளைகளை நன்றாக மசித்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் பலாப்பழ விழுது மற்றும் வெல்லத்தைப் போட்டு மிதமான தீயில் கிளறவும். நெய் பிரிந்து மேலே வரும் தருணத்தில், அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். இப்போது சுவையான 'பலாப்பழ ஜாம்' தயார்.


Next Story