பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்


பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
x

ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர். பிகைண்ட்வுட்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மனோஜ் என்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தில் யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, லொல்லுசபா சாமிநாதன், குக்வித்கோமாளி தீபா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் ஏ.ஆர்.ரகுமான் - பிரபு தேவா இணையும் 6-வது திரைப்படமாகும். முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் - பிரபு தேவா 1994-ம் ஆண்டு 'காதலன்' படத்தின் மூலம் இணைந்தார்கள். ஷங்கர் இயக்கிய இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு ஆகிய படங்களும் இவர்களது கூட்டணியில் வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான பிரமயுகம் படத்தில் அர்ஜுன் அசோகன் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. அவரும் இந்தப் படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Next Story