மாவட்ட அளவிலான கலைத்திருவிழா


மாவட்ட அளவிலான கலைத்திருவிழா
x

மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

பள்ளிக்கல்வி துறையின் சார்பில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து, கலைத்திருவிழாவுக்காக கற்பக விநாயகா அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் அமைச்சர் ரகுபதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) சிவகுமார், நகர்மன்ற உறுப்பினர் லதா கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (இடைநிலை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி), தாசில்தார் கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story