ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி


ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

மணமேல்குடி ஒன்றியத்தில் 9 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பணித்திறன் மேம்பாட்டு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இதற்கு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார். பயிற்சியில் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திற்கு வினாக்கள் தயாரிப்பு, சிறுவர் இதழ் தயாரிப்பு, தேன்சிட்டு இதழ் வாசித்தல் மற்றும் வாசிப்பு இயக்கம் தொடர்பான கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியில் கருத்தாளர்களாக தமிழ் பாடத்திற்கு ஆசிரியர் இளங்கோவடிகள், வனிதா, ஆங்கிலப் பாடத்திற்கு ஆசிரியர்கள் ஜெயபால், சீனிவித்யா ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் பாடவாரியாக ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு பயிற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.


Next Story