இன்றைய ராசிபலன் - 23.05.2024


இன்றைய ராசிபலன் - 23.05.2024
x
தினத்தந்தி 23 May 2024 12:44 AM GMT (Updated: 23 May 2024 1:00 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 10-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 09.43 வரை விசாகம், பின்பு அனுஷம்.

திதி: இன்று மாலை 7.48 வரை பௌர்ணமி பின்பு பிரதமை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00

எமகண்டம் காலை: 6.00 - 7.30

குளிகை காலை : 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை: 12.00 - 1.00

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: ரேவதி

ராசிபலன்

மேஷம்

தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். மாணவர்கள் வகுப்பில் நற்பெயரைப் பெறுவர். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

ரிஷபம்

கலைஞர்கள் எளிதில் கற்று தேர்ச்சியடைவர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விரும்பியவாறே திருமணம் கைகூடும். உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். பழைய கடன்பாக்கியில் ஒரு பகுதி தீரும். அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை கொள்வர். முகம் பொலிவடையும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

மிதுனம்

அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

கடகம்

மனைவியிடம் அனுசரித்து போங்கள். விட்டுக் கொடுப்பதால் நன்மையே நிகழும். விவசாயிகள் நிலப்பிரச்சினையில் இருந்து விடுபடுவர். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். வேலையாட்கள் ஒத்துழைப்பர். தாங்கள் நினைத்தது பலிக்கும். அலுவலகத்தில் தங்கள் அதிகாரிகள் பொறுப்புகளை ஒப்படைப்பர்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

சிம்மம்

ரசனைக்கேற்ப வீடு அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரம் சாதகமாக இருக்கும். தாய்வழி உறவினர்கள் ஆறுதல் தருவர். பிள்ளைகளின் திறன் மேம்படும். காலம் தாழ்த்தாமல் சாப்பிடுங்கள். உரிய நேரத்தில் உதவி கிடைக்கும். தேகம் பொலிவுறும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

கன்னி

வழக்கு முடிவுக்கு வரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். தொழிலாளர்களின் விருப்பம் நிறைவேறும். காதல் திருமணம் பிரச்சினையைத் தரும். பெற்றோர்களின் உடல் நலம் முன்னேறும். மாணவர்களின் மந்தம் நீங்கும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

துலாம்

அக்கம் பக்கத்தினர் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். தொழிலாளர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர்.அலுவலக பணிகளில் ஆர்வம் கூடும். கலைஞர்களுக்கு பணம் குவியும். ஏற்றுமதியில் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

விருச்சிகம்

பிள்ளைகளின் போக்கில் கவனம் தேவை. கணவரிடம் வாக்குவாதம் வேண்டாம். மாணவர்களின் படிப்பாற்றல் கூடும். ஆசிரியர்களுக்கு பாராட்டு குவியும். நிர்வாகத்திறன் கூடும்.தேவையற்ற பயம் நீங்கும். ஆன்மீக சிந்தனை மிகும்.

அதிர்ஷ்டநிறம் : பொன்னிறம்

தனுசு

வியாபாரம் சிறப்பாக இருக்கும் சக ஊழியர்களிடம் நட்பு பாராட்டுவர். பணம் தாராளமாக கிடைக்கும். பணநெருக்கடி குறையும். வாகன செலவு உண்டு. உடல் நிலை நன்றாக இருக்கும். எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்

மகரம்

விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். செலவுக்கேற்ப பணம் வரும். வியாபாரம் அபிவிருத்தியாகும். எதிர்கால பயம் நீங்கும். துணையின் அன்பு நெகிழ்ச்சி தரும். விருப்பங்கள் நிறைவேறும். கிளைகள் துவங்குவீர்கள். புதிய நபர்களிடம் நட்பு ஏற்படும்.

அதிர்ஷ்டநிறம் : கருநீலம்

கும்பம்

அலுவலக கோப்புகளில் கவனம் தேவை. தாயாரின் உடல்நிலை பாதிக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை. வியாபாரம் சூடு பிடிக்கும். தம்பதிகள் புரிந்து கொள்வர். கல்வித் தடை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

மீனம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்


Next Story