இன்றைய ராசிபலன் - 24.5.2024


Today Rasi Palan
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் வைகாசி மாதம் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 10.39 வரை அனுஷம் பின்பு கேட்டை

திதி : இன்று மாலை 07.50 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம் : சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை : 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் காலை : 10.30 - 12.00

எமகண்டம் மாலை : 3.00 - 4.30

குளிகை காலை : 7.30 - 09.00

கவுரி நல்ல நேரம் காலை : 12.30 - 01.30

கவுரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : ரேவதி, அஸ்வினி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளது தான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

ரிஷபம்

விரும்பிய பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். வியாபாரத்தில் போட்டியை வெல்வீர்கள். பூர்வ சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மிதுனம்

வெளிநாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடல் உபாதை இருக்கும். கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

கடகம்

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுபகாரியம் கைகூடும். நட்பு பலப்படும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

சிம்மம்

மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புர். கவுரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

கன்னி

பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

துலாம்

எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும்.கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

விருச்சிகம்

சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப்பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

தனுசு

வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்கும். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம். இல்லையென்றால் முக்கிய விசயத்தில் கோட்டை விடுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

மகரம்

மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். காதல் விசயத்தில் விழிப்பாக இருப்பது நலம். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

கும்பம்

சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வர். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

மீனம்

உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும் லாபத்தினை எட்டிவிடுவீர்கள். நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்


Next Story