கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டி; அர்ஜென்டினா-கொலம்பியா மோதல்


கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டி; அர்ஜென்டினா-கொலம்பியா மோதல்
x
தினத்தந்தி 14 July 2024 12:19 AM GMT (Updated: 15 July 2024 6:08 AM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் மோத உள்ளன.

மியாமி,

48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மியாமி நகரில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன் கொலம்பியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டித் தொடரில் 30-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டியுள்ள அர்ஜென்டினா அணி 16-வது முறையாக கோப்பையை வெல்ல குறிவைத்துள்ளது.

அதே நேரத்தில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் கொலம்பியா 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இன்று இரவு நடைபெற்றாலும், இந்திய நேரப்படி மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே தெரியும்.


Next Story