12 அணிகள் பங்கேற்கும் 'புரோ கபடி லீக்' நாளை தொடக்கம்


12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் நாளை தொடக்கம்
x

கோப்புப்படம் 

தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை நாளை மறுநாள் எதிர்கொள்கிறது

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நாளை (18 ந் தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவிலும், 3-வது கட்ட போட்டிகள் புனேயிலும் நடக்கிறது.

புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்களுரூ புல்ஸ் (இரவு 8 மணி ), டெல்லி-மும்பை ( இரவு 9 மணி ) அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை நாளை மறுநாள் எதிர்கொள்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Next Story