இன்றைய ராசிபலன் - 26.07.2024


Today Rasi palan 26.07.2024
x
தினத்தந்தி 26 July 2024 1:16 AM GMT (Updated: 26 July 2024 6:07 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆடி மாதம் 10ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 7.00 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

திதி: இன்று காலை 06.10 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 10.30 -12.00

எமகண்டம் மாலை: 3.00 - 4.30

குளிகை காலை: 7.30 - 09.00

கவுரி நல்ல நேரம் காலை: 12.15 - 01.15

கவுரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக செல்லம் கொடுக்காமல் இயல்பு வாழ்க்கையினை புரிய வைக்கவும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். உடல் நலம் பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம் கரும் பச்சை

ரிசபம்

திருமணப் பேச்சு வார்த்தைகள் இனிதே முடியும். வெளியூர் பயணத்தால் அசதி ஏற்படும். இந்த பயணங்களால் நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் நிம்மதி நிலவும். குடும்பத் தலைவிகள் ஆடை ஆபரணச் சேர்க்கை செய்வர். ஒரு சிலர் புதிய நகை திட்டத்தில் பணத்தை சேகரிக்க துவங்குவர்.

அதிர்ஷ்ட நிறம் கடல் நீலம்

மிதுனம்

திடீர் பயணங்கள் ஏற்படும்.அந்த பயணங்களால் செலவுகள் கூடும். காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

கடகம்

இன்று புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் வான் நீலம்

சிம்மம்

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் மிகும். தம்பதிகளிடையே அன்பு கூடும். திருமண முயற்சி பலிதமாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பும். பகுதி நேர வேலை கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

கன்னி

கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். தம்பதிகளிடம் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். தொழிலில் ஏற்றம் உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

துலாம்

தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

விருச்சிகம்

செலவு அதிகரிக்கும். சிக்கனம் நடவடிக்கைகள் தேவை. பூர்வீகச் சொத்து வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். சிறு தூர பயணம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

தனுசு

அக்கம் பக்கம் வீட்டாரிடம் நட்புறவு சுமூகமாக நடைபெறும். ஆசிரியர்களுக்கு வீட்டில் தனி வகுப்பு எடுப்பவர்களுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கை உண்டாகும். உடலில் பொலிவும் உற்சாகமும் மிகும். பணத்திற்கு குறைவு ஏற்படாது.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

மகரம்

நண்பரின் உதவி கிடைக்கும். வெளிநபருடன் வாதம் வேண்டாம். பண வரவு சீராக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தாங்கள் நினைத்ததற்கும் மேலாகவே சம்பள உயர்வு கிட்டும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கதவை தட்டும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இயல்புக்கு அதிகமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கும்பம்

மருத்துவர்கள் சாதனை படைப்பர். உடல் நலத்தில் முதுகு வலி வந்து போகும். நாட்டு மருந்து கடைகளில் முடக்கற்றான் எண்ணெய் வாங்கி உபயோகப்படுத்துங்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மீனம்

மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களுடன் நினைவலைகளை பகிர்ந்து கொள்வீர்கள். வழக்கறிஞர்களுக்கு வழக்குகளில் ஒரு திருப்பம் உண்டாகும். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்


Next Story