மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷின் 'ராயன்'? - வெளியான தகவல்


மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷின் ராயன்? - வெளியான தகவல்
x

image courtecy:instagram@dhanushkraja

மீண்டும் 'ராயன்' படத்தை தள்ளிவைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை,

தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. தற்போது ராயன் படத்தை இவரே இயக்கி நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கி இருந்தார். தற்போது மீண்டும் அவர் இயக்கத்தில் 'ராயன்' படம் தயாராகி உள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தனுஷுக்கு 50-வது படமாகும். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர். தற்போது மீண்டும் படத்தை தள்ளிவைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாதத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட சில பெரிய படங்கள் திரைக்கு வருவதால் ரிலீசை தள்ளிவைக்க பேசிவருவதாக கூறப்படுகிறது.


Next Story