6 படங்களில் சித்தார்த்


6 படங்களில் சித்தார்த்
x

கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் டக்கர் படத்தில் நடித்துள்ளார். இதில் திவ்யன்ஷா நாயகியாக வருகிறார். யோகிபாபுவும் நடித்து இருக்கிறார். மேலும் 6 படங்கள் அவர் கைவசம் உள்ளன.

இது குறித்து சித்தார்த் அளித்துள்ள பேட்டியில், "நான் பாய்ஸ் படத்தில் அறிமுகமானேன். சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டேன். கொரோனாவால் எனது படங்கள் வெளியாகவில்லை. தற்போது டக்கர் படம் தமிழ், தெலுங்கில் வர இருக்கிறது.

நான் நடித்துள்ள மேலும் 6 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அதில் இந்தியன் 2 படமும் அடங்கும். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்துகளை வெளியிட்டு வந்தேன். சமூகத்தில் அநீதி நடக்கும்போது கோபப்படுகிற பின்னணியில் இருந்து வந்ததால் அப்படி செய்தேன்.

என்னை நம்பி நிறைய தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகி விட்டேன். இப்போது நடிப்பின் மீது கவனம் செலுத்துகிறேன். டக்கர் கமர்ஷியல் படம். காமெடி, ஆக்ஷன், காதல் அனைத்தும் இருக்கும். கார் ரேஸ் போன்று வேகமாக கதை செல்லும். கஷ்டப்பட்டு சண்டை காட்சிகளில் நடித்துள்ளேன். வித்தியாசமான படமாக தயாராகி உள்ளது'' என்றார்.


Next Story