தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது


தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

மைசூரு அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மைசூரு:-

சிறுத்தை அட்டகாசம்

மைசூரு தாலுகா ஜெயபுரா கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி கிராமத்தில் புகுந்து ெபாதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் சிறுத்தை, ஆடு, மாடு மற்றும் நாய்களை கொன்று அட்டகாசம் செய்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயபுரா கிராமத்தில் புகுந்த சிறுத்தை ஆட்டை அடித்து கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தனர்.

கூண்டு வைத்தனர்

இந்தநிலையில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தப்பகுதியில் சித்தநாயக்கா என்பவருடைய விவசாய நிலத்தில் வனத்துறையினர் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து உணவு ேதடி வெளியேறிய சிறுத்தை நேற்று அதிகாலை இரும்பு கூண்டில் சிக்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை, கூண்டுடன் லாரியில் ஏற்றி பந்திப்பூர் வனப்பகுதியில் வனப்பகுதியில் விட்டனர். தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த சிறுத்தை சிக்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story