டெல்லியில் கட்சி பேரணியின் போது ஆம் ஆத்மி எம்எல்ஏ உட்பட 3 பேரின் செல்போன் திருட்டு


டெல்லியில் கட்சி பேரணியின் போது ஆம் ஆத்மி எம்எல்ஏ உட்பட 3 பேரின் செல்போன் திருட்டு
x

டெல்லியில் கட்சி பேரணியின் போது ஆம் ஆத்மி எம்எல்ஏ உட்பட 3 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் மல்கா கஞ்ச் பகுதியில் நேற்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ உட்பட 3 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

டெல்லியில் நடைபெற உள்ள மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, சந்திரவால் சாலையில் நேற்று ஆம் ஆத்மி கட்சி கொடிகளையும், பதாகைகளையும் ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்த நிலையில் இந்த பேரணியின் போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அகிலேஷ் பதி திரிபாதி, எம்எல்ஏ சோம்நாத் பார்தியின் செயலாளர் மற்றும் குட்டி தேவி ஆகியோரின் செல்போன்கள் திருடப்பட்டதாகவும் இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளதாகவும் துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி தெரிவித்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருதாகவும் அவர் கூறினார்.


Next Story