மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்; சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் பலி


மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்; சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் பலி
x

தேர்தல் ஆணையத்தின் செயலியின்படி, 2-வது கட்ட மக்களவை தேர்தலில் மணிப்பூரில் 78.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

பிஷ்ணுப்பூர்,

நாடு முழுவதும் 2-வது கட்ட மக்களவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

எனினும், மணிப்பூரில் நேற்று நடந்த 2-வது கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது என மணிப்பூரின் தலைமை தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் கூறியுள்ளார். 2-வது கட்ட மக்களவை தேர்தலில் அதிக அளவில் மக்கள் வாக்களித்தனர். கடைசியாக கிடைத்த அறிக்கையின்படி, 75 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன என கூறினார்.

கடைசியாக வெளியான அறிக்கையின்படி, தேர்தல் ஆணையத்தின் செயலியில், 78.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன என தெரிய வந்துள்ளது. இந்த சூழலில், நேற்றிரவு 2.15 மணியளவில் குகி பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில், சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.


Next Story