சி.என்.ஜி. கியாஸ் கிலோவுக்கு ரூ.2.50 குறைந்தது- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி


சி.என்.ஜி. கியாஸ் கிலோவுக்கு ரூ.2.50 குறைந்தது- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

மும்பையில் சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மும்பை,

மும்பையில் சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விலை குறைப்பு

மும்பை பெருநகரில் மகாநகர் கியாஸ் நிறுவனம் வீடுகளுக்கு பி.என்.ஜி. கியாஸ் வினியோகம் செய்து வருகிறது. வாகனங்களுக்கான சி.என்.ஜி. கியாசையும் பெட்ரோல் பங்குகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள நகரங்களில் சுமார் 5 லட்சம் ஆட்டோ, டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்கள் சி.என்.ஜி.யில் இயங்கி வருகின்றன.

மகாநகர் கியாஸ் நிறுவனம் சி.என்.ஜி., பி.என்.ஜி. விலையை குறைத்து உள்ளது.

ரூ.2.50 குறைந்தது

சி.என்.ஜி. கிலோ ரூ.89.50 ஆக இருந்தது. தற்போது சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சி.என்.ஜி. விலை ரூ.87 ஆக குறைந்து உள்ளது. விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த தகவலை மகாநகர் கியாஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சி.என்.ஜி. விலை குறைப்புக்கு டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். மும்பையில் கடந்த 2 ஆண்டுகளாக சி.என்.ஜி. விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் அதன் விலை குறைக்கப்பட்டு இருப்பது ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆறுதலை அளித்து உள்ளது.

அதேவேளையில் வீடுகளுக்கான பி.என்.ஜி. விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


Next Story