மும்பை - நாக்பூர் விரைவு சாலை விதர்பாவின் அடையாளத்தை மாற்றும்- பட்னாவிஸ் நம்பிக்கை


மும்பை - நாக்பூர் விரைவு சாலை விதர்பாவின் அடையாளத்தை மாற்றும்- பட்னாவிஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

மும்பை- நாக்பூர் விரைவு சாலை விதர்பாவின் அடையாளத்தை மாற்றும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மும்பை- நாக்பூர் விரைவு சாலை விதர்பாவின் அடையாளத்தை மாற்றும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.

மும்பை- நாக்பூர் சாலை

மும்பை- நாக்பூர் இடையே சம்ருதி விரைவு சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டம் மராட்டிய சாலை திட்டப்பணிகளில் மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நாக்பூரில் நடந்த விழாவில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

மராட்டியத்தின் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் நாக்பூர், வார்தா மற்றும் விதர்பாவின் பிற பகுதிகளுக்கு அதிக லாஜிஸ்டிக் நிறுவனங்கள் வர உள்ளன.

நாக்பூர்- கோவாவை சம்ருதி சாலை திட்டத்தில் இணைக்கும் திட்டம் உள்ளது. விரைவு சாலையை நாக்பூரில் இருந்து ஐதராபாத், டெல்லியுடன் இணைக்கும் வகையில் 5 ஆயிரம் கி.மீ.க்கு போட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே விரும்புகிறார்.

அடையாளத்தை மாற்றும்

மும்பை- நாக்பூர் சம்ருதி விரைவு சாலை விதர்பாவின் அடையாளத்தை மாற்றும். விதர்பா நாட்டின் அடுத்த பொருளாதார மையமாக மாறும். நான் முதல்-மந்திரியாக இருந்த 2014 முதல் 2019 வரை திட்டப்பணிகள் ஊழல் இன்றி நடந்தது. இந்த காலகட்டத்தில் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் நிறுவன ஆய்வு அறிக்கையில் கூறப்படுகிறது.

2014-க்கு முன் கடந்த 60 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கு இவ்வளவு தொகை செலவிடப்பட்டது இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story