தாராவியில் பெண்ணை தீ வைத்து எரித்தவர் கைது


தாராவியில்  பெண்ணை தீ வைத்து எரித்தவர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

மும்பை,

மும்பை தாராவியை சேர்ந்தவர் நந்த்கிஷோர் படேல். நேற்று நடந்த ஒரு பிரச்சினை காரணமாக 20 வயது பெண்ணுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பெண்ணின் மீது அவர் கடும் ஆத்திரமடைந்தார். தான் வைத்திருந்த பெட்ரோலை அப்பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்து உள்ளார். பெண்ணின் உடலில் தீ பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பெண்ணின் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 70 சதவீத தீக்காயத்துடன் அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாராவி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நந்த் கிஷோர் படேலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story