தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x

தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது49). இவர் மனநலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பால்பாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story