சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 216 போலீசார் பணியிட மாற்றம்


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 216 போலீசார் பணியிட மாற்றம்
x

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 216 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 3 வருடங்களுக்கு மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து, பணியிட மாற்றம் பெற விரும்பும் போலீசார் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 56 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 25 ஏட்டுக்கள் உள்பட 216 போலீசார் பணியிட மாற்றம் செய்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீசார் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள போலீஸ் நிலையங்களில் பணியில் சேர வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story