ஓவேலியில் அட்டகாச காட்டு யானை, கும்கிகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு


ஓவேலியில்  அட்டகாச காட்டு யானை, கும்கிகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

ஓவேலியில் அட்டகாச காட்டு யானை, கும்கிகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சீபுரம் பகுதியை சேர்ந்த நவுஷாத் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டி யானை ஒன்று தாக்கிக் கொன்றது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காட்டு யானை ஊருக்குள் வராமல் அடர்ந்த வனத்துக்குள் விரட்டியடிக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து முதுமலையிலிருந்து விஜய், பொம்மன் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தேடும் பணி நடைபெற்றது. மேலும் ட்ரோன் மூலம் தேடப்பட்டது. அப்போது கிளன்வன்ஸ் காபி எஸ்டேட் பகுதியில் ஒற்றை காட்டு யானை நேற்று முகாமிட்டிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் யுவராஜ் தலைமையிலான வனத்துறையினர் மக்கள் வாழும் பகுதியில் இருந்த காட்டு யானையை மூலக்காடு, புலிக்குந்தா வழியாக சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு அடர்ந்த வனத்துக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் ஊருக்குள் காட்டு யானை வராமல் தடுக்க கண்காணிப்பு பணி இரவு முழுவதும் நடைபெற்றது.



Next Story