புஞ்சைபுளியம்பட்டியில் பா.ம.க. சார்பில்வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தபால் அனுப்பும் போராட்டம்


புஞ்சைபுளியம்பட்டியில் பா.ம.க. சார்பில்வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி  தபால் அனுப்பும் போராட்டம்
x

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது

ஈரோடு

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பெ.மாரிமுத்து தலைமையில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வி.பாரதிதாசன் ஆகியோருக்கு 500 கோரிக்கை மனுக்கள் அடங்கிய தபால்கள் அனுப்பும் போராட்டம் புஞ்சைபுளியம்பட்டி தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

புஞ்சைபுளியம்பட்டி நகர செயலாளர் ர.நந்தகுமார், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் முகைதீன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜே.பி ஜெயபால், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜான் சார்லஸ், துணைத்தலைவர் நாகராஜ், கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்க தலைவர் கண்ணப்பன், மகளிர் அணி நிர்வாகி கோமதி, சுதா, புஞ்சைபுளியம்பட்டி நகர தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் சரவணன், கார்த்தி குமார், குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story