சிறுவர்களுக்கான நுங்கு வண்டி பந்தயம்


சிறுவர்களுக்கான நுங்கு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:46 PM GMT)

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டியாக நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டியாக நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.

நுங்கு வண்டி பந்தயம்

முன்பெல்லாம் வாழ்ந்த சிறுவர்கள் பல்வேறு கலாசார விளையாட்டுகளை விளையாடி ஆரோக்கியமாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாக செல்போன், லேப் டாப், டி.வி. உள்ளிட்ட சாதனங்கள் வீட்டிற்குள் நுழைந்ததால் தற்போது சிறுவர்கள் டி.வி. பார்த்தல், செல்போனில் மூழ்குதல், லேப் டாப் மூலம் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை காணுதல் உள்ளிட்டவைகளை பார்த்து வருவதால் அவர்கள் உடல் நலம் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் இழந்து வருகின்றனர்.

தற்போது கிராமப்புறங்களில் மீண்டும் நமது பாரம்பரிய கலாசார விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட பணங்குடி அருகே பிலாமிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பரிசு

இந்த பந்தயத்தில் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் கலந்துகொண்டு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். போட்டியில் மொத்தம் 17 சிறுவர்கள் கலந்துகொண்டு முதல் பரிசை பணங்குடி சூர்யா, 2-வது பரிசை பணங்குடி அர்ஜுன், 3-வது பரிசை பணங்குடி ஜெயராஜ், 4-வது பரிசை சக்கரவர்த்திபட்டி கிஷோர் ஆகியோர் பெற்றனர்.

அதன் பின்னர் 17 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் 11 பேர் கலந்துகொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். இதில் முதல் பரிசை காந்திநகர் சுதன், 2-வது பரிசை பிலாமிச்சம்பட்டி ராஜேஷ், 3-வது பரிசை நாட்டரசன்கோட்டை அஸ்வின், 4-வது பரிசை கோவினிப்பட்டி முத்துக்குமார் ஆகியோர் பெற்றனர்.

மாட்டு வண்டி பந்தயம்

அதன் பின்னர் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 65 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தேனி மாவட்டம் பூமலக்குண்டு சூர்யா வண்டியும், 2-வது பரிசை பாகனேரி தொழிலதிபர் புகழேந்தி வண்டியும், 3-வது பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் மற்றும் பொண்குண்டுப்பட்டி செல்லையா வண்டியும், 4-வது பரிசை கோவினிப்பட்டி வேலுச்சாமி வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 28 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை தேத்தாம்பட்டி மகேஷ் வண்டியும், 2-வது பரிசை பல்லவராயன்பட்டி சங்கீதா மற்றும் மாம்பட்டி செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை திருப்புவனவாசல் தங்கராசு மற்றும் கோட்டூர் சின்னச்சாமி வண்டியும் 4-வது பரிசை போடி லோகேஷ் ஆகியோர் வண்டியும் பெற்றது.

இரண்டாவது பிரிவில் முதல் பரிசை நெற்புகப்பட்டி ரிதன்யாசதீஷ்குமார் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி பிரதாப் வெள்ளையன் வண்டியும், 3-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் மற்றும் கொட்டக்குடி முத்துராமன் வண்டியும், 4-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும் பெற்றது.


Next Story