சுகாதார ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு


சுகாதார ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x

சுகாதார ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு்ள்ளது.

விருதுநகர்

சாத்தூர்,

ஆலங்குளம் அருகே அப்பையநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகலட்சுமி (வயது 32). இவர் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் வேடசந்தூரை சேர்ந்த சுகாதார ஆய்வாளரான மோகன் (34) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது முருகலட்சுமியின் வீட்டார் 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் அப்பையநாயக்கன்பட்டியில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் மோகன், அவரது அம்மா வளர்மதி, சகோதரி நாகலட்சுமி, அவரது கணவர் மகாதேவன் ஆகிய 4 பேரும் முருகலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முருகலட்சுமி வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி கணவன், மனைவி இருவருக்கும், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மோகன் பணியிட மாறுதலுக்காக பணம் வாங்கி வரச்சொல்லி அவரை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முருகலட்சுமி சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மோகன் வரதட்சணை கொடுமை செய்து வருவதாகவும், ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இதுகுறித்து மோகன் உள்பட 4 பேர் மீது சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story