பாலத்தில் இருந்து விழுந்து கட்டிட மேஸ்திரி பலி


பாலத்தில் இருந்து விழுந்து கட்டிட மேஸ்திரி பலி
x

வாணியம்பாடியில் தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பாலத்தில் இருந்து விழுந்து கட்டிட மேஸ்திரி பலியானார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பாலத்தில் இருந்து விழுந்து கட்டிட மேஸ்திரி பலியானார்.

தூக்கி வீசப்பட்டு சாவு

தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள தேவராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனி என்கிற முனீஸ் (வயது 25). இவர் பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் இருந்து தேவராஜபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

புதூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாக சென்றபோது மோட்டார் சைக்கிள், தடுப்புச் சுவர் மீதும் மோதியது. மோதியவேகத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற முனீஸ் பாலத்தின் மீது இருந்து தூக்கி வீசப்பட்டு 30 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடி புதூரில் உள்ள இந்த ெரயில்வே பாலத்தின் மீது அடிக்கடி தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story